பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நோய் யாது? எது இருந்தால் இன்பம் ஏற்படும்? பூவுலகம் முழுவதற்கும் பொது நீதி புகன்றருளும் புண்ணிய மூர்த்தியாகிய திருவள்ளுவ தேவர், o அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்(கு) இவ்வுலக மில்லா தியாங்கு” என்று கூறுவதால், பொருளுடையவரே பூமியில் இன்பம் காண்பார் ; பொருளில்லாதவர் துன்பமே அநுபவிப்பார் என்பது விளங்கும். அதல்ை ஐச் வரியமே ஆனந்த வாழ்விற்கு அஸ்திவாரம். தனமே சந்தோஷ வாழ்விற்குச் சாதனம். கைலாய மலை முதல் கன்னியா குமரி வரை அகன்று பரந்து கிடக்கும் இப்பாத கண்டத்தில் சுமார் நாற்பது கோடி ஜனங்கள் வசிக்கின்றனர். இவர்கள் நிலைமை யாது? இவர்கள் வாழ்வு இன்ப மயமானதா? அல்லது துன்பமயமானதா? இக் கேள்விக்குச் சரியான விடையளிக்க இந்தக் கோடிக்கணக்கான மக்களில் ஒவ்வொருவரிடமும் சென்று அவர் வாழ்வு குறித்து வினவி விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு காட்டின் கேஷமத்தை அறியத் தனிப் பெருஞ் சோதனை ஒன்றை வைத் திய நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். சில வருஷங்கள் சென்னை அரசாங்கத்தில் ஆரோக்ய இலாக்கா அத்யட்சராயிருந்த கர்னல் ரஸ்ஸல், சிசு மரண விகிதத்தைக் கொண்டு தேசத்தின் கேஷமத் 75