பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101

வயிருர சோறு இருந்தால் போதும் என்று விரும்பியவன். இப்பொழுது வகைக்கு ஒன்ருக, வாய்க்கு ருசியாக உணவு வேண்டும் என்று விரும்பினான்.

மாற்றுக்கு ஒரிரண்டு உடை இருந்தால் போதும் என்று, ஆசைப்பட்டவன், இப்பொழுது மைனரை ப்’ போல உடுத்திக் கொண்டு உலா வர வேண்டும் என்று முயன் ருன்,

ஒரிரண்டு போட்டிகளில் பெற்ற அவனது வெற்றியைக் கண்டு, பலர் பாராட்டிய போது, அப்படிப்பட்ட பாராட்டு கரைகள் தனக்குத் தினம் வேண்டும் என்று கேட்க ஆசைப் பட்டான்.

இப்படி நாளொரு வண்ணமுமாக முத்துச்சாமி மாறிக் கொண்டே வந்தான்.

நண்பர்கள் அதிகமாயினர், சினிமா, நாடகம், ஒட்டல், பூங்கா என்ற நடைமுறைகள் மாறிக் கொண்டே வந்தன.

காலமாலே உடற்பயிற்சி என்ற பயிற்சிமுறைகள் மாறியது. வாரத்திற்கு இரு முறை என்பது மாறி, வாரத்திற்கு ஒரு முறை என்று வந்தது. பின்னர், ஒடும் களத்திற்கு வந்து போவது என் து ஒரு கடமை திலேயும் வந்தது.

அதற்குக் காரணம் இருக்கத்தான் இருந்தது.

அவனுக்குப் பாராட்டுக் கூற வந்த ரசிகைகளில் பாலா என்பவளு ஒருத்தி, அவனது உயரத்தையும், தாண்டும் அழகையும் கண்டு மயங்கி அவள் அவனுடன் உறவு கொள் வதில் கொண்டே ஆசையில் வென்றுவிட்டாள்.

பழக்கம் பாசமாக மாறி பாசம், பாராட்டுதல் மூலமாக 'Friend என்று ஆகி, பிறகு ரசிகை என்று ஒட்டிக் கொண்டு அதற்கும் மேலாக உயிர் என்று உள்ளே புகுந்து .கொண்டது