பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108



சோடா பாட்டில்கள் மற்றும்; பல சில்லறைத் தின்பண்டங்கள்.

ஆமாம்! அவர்கள் மனக்கலக்கத்தை மாற்றுவதற்காக வந்திருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலக்கம். குழப்பம். வேணு கொஞ்சம் அடக்கத்துடனும், கூச்சத்துடனும் குந்தியிருந்தான்.

மார்லண்டோ அவனே வற்புறுத்தி ஒரு ‘டோஸ்’ சாப்பிடச் சொன்னர். சுந்தரம் இது ஒன்றும் தப்பில்லை என்று சமாதானம் கூறினர். வடிவேலுவோ; பரவாயில்லடா தம்பி! ஒன்னோட ஒடம்பு வலிக்கு இது கொஞ்சம் ஒத்தடம் கொடுத்ததுமாதிரி இருக்கும். என்று ஒத்துஊதினர்.

பெரியவங்க முன்னலே நான் எப்படி? என்று சினுங்கினான்.

கொஞ்ச நேரத்தில் அவன் குடித்த விதம், ஏற்கனவே அந்த விஷயத்தில் அவன் கெட்டிக்காரன் என்பது விளங்கி விட்டது. வேணுவை எல்லோரும் பாராட்டினர்கள்.

அந்த நிகழ்ச்சி அற்புதமாக அரங்கேறிக் கொண்டு இருந்தது.

குணசேகர் மனம் ஒடிந்துபோயிருக்கின்றார் என்று வடிவேலு ஒரு வரலாறு கூறுவதுபோல சொல்லிக் கொண்டு வந்தார்.

இனி பணம் கிடைக்குமா? என்று வேணு மிகவும் கவலையுடன் கேட்டான். என்னோட பயிற்சி நின்னுபோயிட்டா! எப்படி?...என்று நாக்குழறக் கேட்டான்.

இப்பொழுது அவனுக்குப் ‘பயிற்சி’ என்பது குடி தான்.