பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெதுவாக கெஞ்சிக் கொண்டிருந்தவன் முகம் மாறி சொல்லவாபோறே. உன்னை விட்டத்தானே போய் சொல்லுவே?...--

என்று ஏக வசனத்தில் பேசியவாறு பக்கத்தில் கிடந்த ஜேவலின் கம்பை எடுத்து அவரைத் தாக்க தயாராகி விட்டான்.

எறிந்து விடாதே....அது என் நெஞ்சில் பாய்ந்து விடும்" என்று பயந்து பின் வாங்கினர் பயிற்சியாளர்.

"உன்னை இன்னிக்கு விடமாட்டேன்' என்று ஓங்கிக் குத்த முயலும்போது 'ஏய் வேணு' என்ற குரல் மிகக் கோபமாகக் கேட்டது.

திரும்பிப் பார்த்தான் வேணு திகைத்துப் போய் நின்றான்! எங்கே வந்தார். இவர் ! எப்படி வந்தார் ?

பேயறைந்தது போலிருந்தது அவன் முகம் அங்க அவரோ ஆத்திரத்தின் சொருபமாக நின்று கொண்டிருந்தார்.