பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
115

மனப்போராட்டம்தான் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது.

மனநோய்க்கு மருந்தேது !

வேணுவையும் இப்பொழுது கைகழுவியாகிவிட்டது. ஓடிப்போன முத்துசாமியைவிட , கொடுரமனவனாக தெரிந்தான் வேணு. பயங்கரமானவர்களே பண்பார்கள் என்று நினைத்து, இலட்சியமாக்கிக் கொண்ட ைக தினக்கும் பொழு தெல்லாம். குண சேகர் கூனிக் குறுகிப் போஅர். குற்ற வாளி போலத் தவித்தாசி.

வெளியே தலகாட்ட முடியாத வெட்கம், வேதனே, அவமானம் அவரை அரித்து எடுத்தது. அனலாய் கிடந்தார்.

ஒரு நாள், இன்பநாதன் எதிரே உட்கார்ந்திருந்தபோது, கண்விழித்த குணசேகரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

"என்ன மன்னிச்சுடுங்க. நிம்மதியா இருந்த உங்களை, இந்த விளையாட்டுப் பக்கம் கொண்டு வந்த பசவத்துக்கு, எனக்கு எந்தப் பிறவியிலும் ம ைனிப்பே கிடையாது. அழகாகவே எல்லா காரியமும் பண்றவரு நீங்க இப்படி அலங் கோலமா படுக்கையிலே கிடக்குறதைப் பார்த்தா.... எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன். நான்பாவி!

இன்பநாதன் குலுங்கிக் குலுங்கி அழுததைக் கண்ட குணசேகர் கண்களில் கண்ணிர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் அவர் எதுவுமே பேசவில்லை மாறாக அவரது கையை அழுத்திப்பற்றிக் கொண்டார். அதில் ஒரு இதம் தெரிந்தது இன்பநாதனுக்கு.

இரண்டு வாரங்கள் இப்படியே கடந்தோடின. ஒருநாள்

இன்பநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. குணசேகர் வாய் திறத்து பேசினர். அதுதான், பேரிடியாகப்போனது.