பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120



இந்த நிகழ்ச்சியைப் பார்த்த குணசேகரின் மனம் நெகிழ்ந்தது.


வடகொரியா தென்கொரியா வீரர்கள், மற்றும் வெளி நாட்டு வீரர்கள், ஆட்டத்தில் ஆட இறங்கியவுடன், பார்வை யாளர்களைப் பார்ப்பதில் சில. கூக்குரல் போட்டு கலாட்டா செய்யும் சத்தத்தைக் கூட காது கொடுத்துக் கேட்பதில்லை.


பந்தும் இலக்கும் தான் அவர்களுக்குக்குறி. அவ்வப் போது பயிற்சியாளரின் அக அசைவையும் கண் அசைவையும் பார்த்து விளையாடுவதுதான். அது தான் அவர்களின் பயிற்சியும் பழக்கமும்.


அந்தப் பண்பட்ட பயிற்சியால் தான் வடகொரியா தங்கப் பதக்கத்தை வெல்ல முடிந்தது.

பயிற்சியாளரை குருவாக மட்டும் அவர்கள் கொள்ள வில்லை. தெய்வமாக மதித்தார்கள். அவர் சொல்ல வேத வாக்காக ஏற்றுக் கொண்டார்கள். அவர் காட்டும் பாதையை முன்னேற்ற பாதையாக மதித்து நடந்தார்கள். அவர் கண் அசைவு பார்த்துக் காரியம் செய்தார்கள்.


அந்த மதிப்பும் உழைப்பும்தான் அவர்களே, வெற்றி வீரர்களாக உயர்த்தியது. ஒழுக்கமும், உண்மையான விளையாட்டுப் பற்றுமே அவர்களே உயர்ந்த இடத்தில் அமர்த்தியது.


குணசேகரின் நினைவுகள் அவரையும் மீறி துயர நிலைக் குத்தள்ளிய நினைகளாகப் போய் அமிழ்ந்து கொண்டன.


வசதிகள் இல்லையென்ரால் வறுமை என்கிரார்கள். வசதி செய்து கொடுத்து விட்டால், தற்பெருமை தலை தாங்க முடி யாமல், சிந்தை கெட, தறுதலையாகிப் போகின்ரார்கள் தம்மவர்கள்.