பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஒரு சட்டம் வந்தால், அதை எப்படி மீறுவது தப்பித்துக் கொள்வது என்றுதான் முயற்சிக்கின்றார்களே தவிர, அதற்கு எப்படி இணங்கிப் போவது மதித்து நடப்பது என்ற மனப்பாங்கே அற்றுப் போயிற்றோ, வற்றிப் போயிற்றோ என்று எண்ணும் அளவுக்கு விதிகளை நம்மவர்கள் மிதிக்கின்றார்கள்.

இல்லையென்றால், இந்த மூத்துசாமியும் வேணுவும், நேசலிங்கமும் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

குணசேகர் மனதுக்குள்ளே குமுறிக் கொண்டிருந்தா கோடி நினைவுகள் திமுறிக் கொண்டு கிடந்தன.

எவ்வளவு பெரிய நாடு இந்தியா? உலக மக்கள் தொகை நாட்டில், சீனாவுக்கு அடுத்த படியாக இடம் வகிக்கிறதே? தங்கப் பதக்கப் பட்டியலில் 5வது இடம் ஏன்

ஆற்றல் உள்ள மக்கள் இங்கே இல்லாமலா போய்விட்டார்கள்? பயிற்சியில் தவறா! எடுக்கும் முடிவில், போடும் திட்டத்தில் தவறா?

ஏன்? நான் போட்ட திட்டம் எப்படி தவறிப் போயிற்று ஏன் நான் இந்த நிலைக்கு ஆளானேன்! படுத்தே போனேன் இப்படி எதிர்மாறாகப் பேசிப் பேசி, தனது சிந்தனையை எரிமலையாக்கிக் கொண்டிருந்தார் குணசேகர்.

இன்பநாதன் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தார் அவரது முகபாவம், எதையோ குணசேகரிடம் சொல்லி விடவேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தது.

ஒரு செய்தி உங்களிடம் சொல்லியாக வேண்டும். நீங்கள் சம்மதம் தெரிவித்தால் சொல்கிறேன் என்று பீடிகை போட்டு ஆரம்பித்தார்.