பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/124

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124

அவன்கிட்ட பேசினேன்.. ரொம்ப வருத்தம் ஒங்களுக்கு செஞ்ச நம்பிக்கை துரோகம் தான், இப்படி நெஞ்சு காய இருமிச் சாகுறேன். அவர் முகத்துல முழிக்கச் கூட எனக்கு முடியலே! எந்த முகத்தை வச்சிக்கிட்டு அவரு எதிர்த்தாப்புல வர்ரதுன்னான்!

அவனை பார்க்கனுமே... என்று குழறிக் குழறிப் பேசினார் குணசேகர்.

வாலிபத்தைத் தவறா பயன்படுத்துனதுனால் வந்த நோயை இப்ப அவன் அனுபவிக்கிறான். கண் கெட்டபிறகு பிறகு சூரிய நமஸ்காரம்னு சொல்வாங்களே, அந்த மாதிரி இருக்கு அவன் நிலைமை... ...

இன்பநாதன் பேசி முடிப்பதற்குள்ளே, அழுகைச் சத்தம் கேட்டது, இன்பநாதன் திரும்பிப் பார்த்தார். அவர் பின்னால் முத்துசாமி நின்று கொண்டிருந்தான்.

மெதுவாக நடந்து வந்து, குணசேகரின் காலடியில் நின்று குனிந்தான். அவர் கால்களில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ஐயா! என்னை மன்னிச்சுடுங்க... நானே என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கிட்டேன். என் வாழ்க்கைய குட்டிச்சுவராக்கிட்டேன். உங்க வாழ்க்கையையும் பாழாக்கிட்டேன்.

திக்கித் திக்கிப் பேசினான். இடையிடையே இருமினான். என்ன செய்வது? வந்ததற்கு வருந்துவதைத் தவிர, என்ன பண்ணுவது?

குணசேகரின் கண்கள் நீரூற்றாக இருந்தன. இன்பநாதன் மௌனமாக இருந்தார். மனதுக்குள்ளே அழுதார்.