பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



181


தான் வாழ்வென்று வாழ்பவர்கள். அவர்களுக்கு ஏவலாளர் களாகப் பணியாற்றுகின்றார்கள்.

இந்த நிலையில் இளைஞர்கள் எப்படி சிறந்த வீரர்களாக வீராங்கனைகளாக வரமுடியும் ? அவர்களுக்கு வழிகாட்ட யார் இருக்கின்றார்கள் ! திறமை உள்ளவர்கள் கூட சிபாரிசு இல்லாத காரணத்தால், அமுத்தப்படுகின்றார்களே!

சிபாரிசு தானே நமது விளையாட்டுத் துறையை கெடுக்கிறது ?

உயர்ந்த நோக்கத்தை, கட்டுப்பாடான வாழ்க்கை முறையை, விளையாட்டு நுண்திறனை யார் கற்பிக்கின்றார்கள்?

விளையாட்டுத்துறை பணம் செலவு செய்யும் பணித்துறை யாகப் போய் கொண்டிருக்கிறதே! லட்சியமில்லாத திட்டங்கள்-பணத்துக்காக பணியாற்றுகின்ற ஊழியர்கள், சிறந்த ஆசிரியர்களுக்கு மரியாதை கிடைக்காத சூழ்நிலைகள், முரண் படான கருத்துக்கள்-முரட்டுத்தனமான பேச்சுக்கள்.

எப்படி இங்கே விளையாட்டுத்துறை வளரும்?

யாரிடம் கோபித்துக் கொள்வது? யாரைத் திருத்துவது? ஆத்திரப்படுவதில் அர்த்தமே இல்லைதான்...

நாலரை கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் ஒரு வீரர் வீராங்கனை கூட இந்தியப் பிரதிநிதியாகப் போக முடியவில்லைேயே...

இப்படி எல்லாம் இன்பநாதனின் மனக்கடலில் நினைவலைகள் வந்த வந்து போய்க் கொண்டிருந்தன.அலைகள் கரை யோடு நின்று போவது போல அவரது ஆசைகள் மனத் தளவிலே தின்று போயின,