பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132



என் காலத்திலே ஒரு நல்ல வெற்றியைப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன். மழையில் கட்டிய மணல் வீடுபோல ஆயிற்றே ! புயலில் ஏற்றிய அகல் விளக்குபோல் அணைந்து போயிற்றே ! செவிடர்கள் காதில் ஊதிய சங்காயிற்றே !

காலில்லாதவர்களுக்கு செருப்பு எதற்கு ? லட்சியம் இல்லாதவர்களுக்கு உதவி எதற்கு ?

யார் மேலேயும் ஆத்திரப்படவேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டின் தலை விதி, என்று நினைத்துக் கொண்டபோது அவருக்கு மனதில் கொஞ்சம் இதம் தெரிந்தது !

ஆமாம் ! இந்திய மக்களுக்கு 'தலைவிதி' என்ற சொல் தான் அத்தனை துன்பங்களையும் போக்கும் அருமருந்து. அந்த விதியை நினைத்து ஆறுதல் அடைந்தார் ! ஆனால் விதியின் வேலை அவருக்குத் தெரியாதா என்ன ?