பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134



போனதையே முடிச்சுக்கள் போட்டு முடிந்து கொண்டிருந்தது.

முறுக்கு சுண்டல், முறுக்கு சுண்டல், என்று கத்திக் கொண்டே ஒரு பெரியவர், கையில் டிபன் பாக்சுடன் வந்து பநாதனின் எதிரே நின்றார். இன்பநாதனே அவரைப். பார்த்தாரே ஒழிய, எந்தவித சலன பாவமும் அவர் முகத்தில் தான்றாமல், பார்த்துக் கொண்டேயிருந்தார்.

என்ன சார் பார்க்கறீங்க ? இந்த வயசுலயும் இப்படி தூக்கித் தூக்கி அலஞ்சி வியாபாரம் பண்ணி, வயித்தைக் கழுவுறேன்னு பார்க்குறீங்களா ! நான் ரொம்ப நல்ல நிலையில் இருந்தவன் சார். பெத்த புள்ளைங்க என்ன மோசம் பண்ணி: வீட்டைவிட்டே விரட்டிடுச்சுங்க. வெளியே தலை காட்ட வெட்கப்பட்டுகிட்டு, பட்டணத்துக்கு ஒடி வந்துட்டேன். வயிறுன்னு ஒன்னு இருக்கே... அதுக்குத்தான் இந்த வேலை, என்ன பண்றது ? எதிர்பார்த்தது எல்லாம் நடந்துட்டா, இந்த உலகத்துல இருக்குறவன் எல்லாம் தன்னையே தெய்வம்னு சொல்லிடுவானுங்க... அப்படி இல்லடா.நீங்கள்லாம் மனுஷனுங்கதான்னு மண்டையில் அடிச்சு சொல்ற மாதிரிதான், நாம் நினைக்காதது எல்லாமே திரும்பத் திரும்ப, தடக்குது...தெய்வம் தெய்வம்தான்.மனுஷன் மனுஷன்தான்.

பெரியவர் தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே நின்றார்,

இன்பநாதனுக்கு மனசு இலேசாக நெகிழ்ந்தது. இப்படி உட்காருங்க என்றார்,

எல்லாத்தையும் வித்தாகனும் சார். அப்பதான் ஏதாவது கிடைக்கும். இன்னைய பொழைப்பை ஒட்டனுமே என்றார்.

மொத்தமா என் கிட்ட கொடுத்துடுங்க... நானே வாங்கிக்குறேன்’ என்று இன்பநாதன் சொல்லி முடிக்கு முன்னமே, அந்தப் பெரியவர் எதிரே உட்கார்ந்து கொண்டார்.