பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பெரியவர் டக்கென்று அதற்குப் பதில் சொன்னார். நீங்க ஒன்னு... நரி வலம் போகு என்ன இடம் போன என்ன மேலவிழுந்து பிடுங்காம இருந்தா சரின்னு போயிடுறதுதான் புத்திசாலித்தனம்... யாரும் யாருக்கும் புத்திசொல்லக்கூடாது. புத்தி சொல்றவன் மடையனாயிடுறான்... உதவி பண்றவன் இளிச்சவாயன் ஆயிடுறான்......

இன்பநாதன் இந்த ஆழமான அனுபவ வார்த்தைகளில் மயங்கிப் போனார், எவ்வளவு இலேசாக இவர் பேசுகிறார் ? அந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டுப் போயிருக்கிறார் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

ஒரு பெரிய பேப்பரை எடுத்து, எல்லா முறுக்கையும் கட்டத் தொடங்கினார்.

இது ரொம்ப பழைய பேப்பருங்க....

இருக்கட்டுமே...பார்த்தபிறகு பொட்டலம் கட்டலாம்.

அவசரமாக வாங்கினார். அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தார். திருப்பித் திருப்பி, பல கோணங்களிலும் வைத்துப் பார்த்தார்...

இந்தத் தாடியை எடுத்துட்டா, நம்ம நேசலிங்கம் மாதிரி தான் இருக்கும்.பேரும் நேசம்னு போட்டிருக்கு : “சிப்பாய்னு போட்டிருக்கு....நம்ம நேசமா இவன் ...

சார் ! எனக்கு நேரமாவுது...புறப்படுறேன் என்றார் பெரியவர்.

இந்தாங்க. 10ரூபாய் என் அவர் கையில் திணித்து விட்டு நீங்க போங்க...ஒங்க அன்பான பேச்சுக்கு நன்றி