பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

என்று பெரியவரை அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் பத்திரிக்கையைப் பார்த்தார்...

ஆசிய விளையாட்டுக்களில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்த வீரன் நேசன் என்று எழுதியிருந்தது.

பத்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு... எல்லைப் படையில் ஒரு சிப்பாய்... ஆனால் ஓட்டத்திலோ மேஜர் என்று வருணிக்கப்பட்டிருந்தது.

ஒருவேளை.. நமது நேசலிங்கம்தான் வெற்றி வீரன் ஆகிவிட்டானா... இதைப் போய் குணசேகரிடம் சொல்லவேண்டும் என்ற வேகம் அவருள் எழுந்தது...

கவிழ்ந்து போய் விடுமோ என்று பார்ப்பவர்கள் அச்சப்பட்டு விலகிக் கொள்ளும் அளவில் ஆட்டோ வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அது என்னவோ அட்டை ஊர்வது போலப் போகிறது என்று இன்பநாதன் குறைபட்டுக் கொண்டே உள்ளே பயணியாக உட்கார்ந்திருந்தார்.

குணசேகர் வீடு வந்ததும், பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு சில்லறைகூட வாங்கிக் கொள்ளாமல், சிறுத்தை பாய்வது போல, இன்பநாதன் பாய்ந்து சென்றார்.

டாக்டர் இன்ஜெக்‌ஷன் போட்டுக் கொண்டிருந்தார் குணசேகர் காய்ச்சலால் முனகிக் கொண்டிருந்ததை சகிக்க முடியாமல், முகத்தை மூடியவாறு அழுது கொண்டிருந்தார் அவரது மனைவி.

சீக்கிரம் காய்ச்சலோட வேகம் குரைஞ்சுடும். நான் சொன்ன மாதிரி மருந்தை கொடுத்துகிட்டு வாங்க.. என்று சொல்லி விட்டு டாக்டர் புறப்பட்டார்.


ஆ- 9