பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

ஒரு அழகான பெட்டியில் வைத்திருந்த தங்கப்பதக்கத்தை எடுத்து அவரது கால்களின் மேல் வைத்துவிட்டு, கீழே அமர்ந்து அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது அந்த உருவம்.

இன்பநாதனுக்கு என்ன செய்வது. என்ன சொல்வதென்றே புரியாமல், அந்த அறைக்குள் ஓடிவந்தார்.

நேசலிங்கம் நீயா ? என்று கூறிக் கொண்டே அந்த உருவத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

நீங்க எப்ப வந்தீங்க? எப்படி இருக்குறீங்க? என்று நேசலிங்கம் அன்போடும் ஆச்சரியத்தோடும் கேட்டான்.

நான் எங்கேப்பா போனேன்! எப்பவும் இங்கேதான் இருக்குறேன். உங்க மூணு பேரையும் நம்பி இருந்த இவரு அதே விசாரத்தினால் படுக்கையில விழுந்துட்டாரு. கால் கை விளங்காம போச்சு... எந்த வைத்தியமும் இவரை குணப்படுத்த முடியலே. உன்னை பார்த்த பிறகுதான் எனக்கு உயிரே வந்துச்சு...

நேசலிங்கத்திற்கு இப்பொழுதுதான் உண்மை விளங்கியது.குணசேகர் முகத்தை உற்று நோக்கினான். பிரகாசமாக கவர்ச்சிகரமாகத் தோன்றும் அவரது முகம், மங்கிய நிலவாகத் தெரிந்தது. அவனையறியாமல் அவன் செயல்படத் தொடங்கி விட்டான்.

அய்யா ! உங்க நேசலிங்கம் வந்திருக்குறேன். கண்ணை தொறந்து பாருங்க. உங்க லட்சியம் வெற்றியடைஞ்சிடுச்சுங்க. இதோ பாருங்க தங்கப்பதக்கம்... உங்க நம்பிக்கை வீண் போகல. உங்க லட்சியம் தோல்வி அடையல. நீங்க எடுத்த முயற்சி வீணா போகலே.... இதோ பாருங்க...