பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

நேசலிங்கத்தை அருகில் வருமாறு சைகை செய்து முகத்தைத் தடவிக் கொடுத்தார். அவனை அருகில் படுக்கையின் மீது அமருமாறு சைகை காட்டினார்.

பேச விரும்பாத அவர் மனம் பேச ஆசைப்பட்டது. பேசத் திறக்காத அவர் வாய், பேசத் துடித்தது. உளறித் தவித்த நாக்கோ உற்சாகம் பெற்றதுபோல துடிக்கத் தொடங்கியது.

எப்படி....எப்படி என்று உளறியபடிகுணசேகர் நேசலிங்கத்தைக் கேட்டார். இன்பநாதனும் அவனைத் தூண்டினார். நேலிங்கம் தனது கதையைச் சொன்னான்.

முத்துச்சாமியும் வேணுவும் செய்த கொடுமையைப் பார்த்தபிறகு, எனக்கே பொறுக்க முடியலிங்க, அவமானமா போயிடுச்சு, யார்கிட்டேயும் சொல்லாம நான் வடநாட்டுக்கு ஓடிப் போயிட்டேன்.

பசியும் பட்டினியுமா அலைஞ்சி திரிஞ்சேன். காஞ்ச ரொட்டியைக்கூட கண்ணால பார்க்காம, நாலைஞ்சி நாள் கூட பட்டினியா கிடந்தேன். இனிமே பிச்சையெடுத்துத் தின்னா தான் உயிர் பிழைக்க முடியும்னு உறுதியா நம்புனேன்.

பிச்சைக் கேட்குறதுன்னு முடிவு பண்ணிட்டு பஸ் ஸ்டாண்டு கூட்டத்துக்குப் போனேன். நான் போய் கேட்ட, முதல் ஆளு என் கூட படிச்ச நண்பனா இருந்தான்.

என்னை அவன் யார்ன்னு புரிஞ்சிகிட்டான். என்னை கட்டி புடிச்சிகிட்டான், என்னோட பரிதாப நிலையை அறிஞ்சி கண்ணீரே விட்டான். ஓட்டலுக்குக் கூட்டிகிட்டுப் போய். வயிறு நிறைய வாங்கிக் கொடுத்தான்.