பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15

இளைஞர்கள் சிலர், தமது பிற்காலம் நற்காலமாக இருக்க வேண்டும் என்ற எதிர்காலத் தயாரிப்புக்காக ஓடியும் தேகப் பயிற்சியும், செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த இளங்காலைப் பொழுதிலும் ஒரு சிலர் வந்து வாய்பார்த்து கொண்டு நின்றனர். அதற்கு உண்மையான காரணம் வேறு.

விளையாட்டுப் போட்டிக்காக, உடல் திறன் பெற பயிற்சி செய்ய வரும் பெண்களைக் குறைவான சீருடையில் பார்க்கும் ஆசைதான் அது!

இப்படிக் (கோலாகலமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. சென்னைக் கடற்கரை, இந்தக் களிப்பில்தான் கடல் சிரித்துக் கொண்டிருந்தது.

கடலில் கால் நனைய நின்று கொண்டித்தார் குணகேசர், ஏதோ, ஒரு பிரச்சனையில் போராடிக் கொண்டிருப்பதை அவர் முகம் காட்டிக் கொண்டிருந்தது.