பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21

உண்டு, தன் வேலை உண்டு என்று எப்பொழுதும் செயல்படுபவர்.

இப்படி எண்ணிக் கொண்டே சுப்ரமணியம் குணசேகர் கூடவே நடந்து கொண்டேயிருந்தார் !

சுப்ரமணியம் ஏதோ பேசத் தொடங்கிவிட்டு நிறுத்திக் கொண்டார் ! சுப்ரமணியத்திற்கே ஆச்சரியம் ! இப்படி அவர் இடையிலே பேச்சை நிறுத்தியதே இல்லை. ஆனால். குணசேகர் மனதில் ஏதோ கவலே இருக்கிறது அதைச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார் என்று எண்ணி, அவர் முகத்தைப் பார்த்தார் !

அவர் எண்ணத்தை ஏமாற்றுவதுபோல, பிறகு சொல்கிறேன் என்று வேகமாக நடந்தார் குணசேகர்.

காலம் அழைத்ததை அவர் உணர்ந்தாரோ இல்லையோ, குணசேகர் அழைத்த்தைக் கேட்டு சுப்ரமணியம் பின், தொடர்ந்தார் !