பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30

யோசிக்க வேண்டிய விஷயம் என்றார் இன்பநாதன் கடைகளில் தொங்குகின்ற பத்திரிக்கையின் அட்டைப் படங்கள் மொட்டைப் படங்களாகத் தானே இருக்கின்றன லட்சியவாதிகளால் இந்தத் துறையில் வெற்றி பெற முடியாது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

எல்லாமே சொல்லியாகி விட்டது, இனி....ம் .......ஒரே ஒரு கருத்தைச் சொல்லப் போகிறேன். அதற்கும் மறுப்பு சொல்லாமல் இருப்பீர்களா என்று பீடிகையுடன் தொடங்கினார் இன்பநாதன். குணசேகர் மெதுவாக சிரித்துக் கொண்டு, நண்பரின் முகத்தைப் பார்த்தார்.

நீங்கள் ஏன் எங்கள் விளையாட்டுத்துறை பக்கம் வரக் கூடாது?

விளையாட்டுத் துறையில் நான் என்ன செய்ய முடியும்! எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது! குணசேகரின் கேள்வி குழப்பத்துடன் வெளிவந்தது.

விளையாட்டுத்துறையில் மேல் நிலையில் இன்று இருப்பவர்கள் எல்லாம் ஒரு சம்பந்தத்துடன் தான் இருக்கின்றார்கள் என்று நினைக்கிறீர்களா! இன்பநாதன் எதிர்க் கேள்வி போட்டார்.

வக்கில் படிப்பு படித்தவர்கள் தான் வழக்காடும் மன்றத்திற்குள் சென்று வாதிட முடியும். வீதியிலே நின்று அதிகப் பிரசங்கம் செய்பவர்கள், என்ன தான் முயன்றாலும், உள்ளே. நுழைய முடியுமா ! வாதாட முடியுமா ? என்ன தான் அனுபவம் இருந்தாலும் மருத்துவப் பட்டம் வாங்காமல் ஊசி போட முடியுமா? அறுவை சிகிச்சை செய்ய முடியுமா! அரசாங்கம் தான் அதற்கு இடம் கொடுக்குமா!