பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36


கள் தேர்வு பெற்று, வெளியேறி வந்து வேலையே இல்லாமல் பல ஆண்டுகளாக வேண்டித் தவங் கிடந்தும், மனம் கசந்தும் கிடக்கின்றார்கள்.

வேலையில்லாத பிரச்சினை எந்தத்துறையில் இல்லை ?

நான் அதைச் சொல்ல வரவில்லை என்றார் இன்பநாதன் உடற்கல்வித் துறை பற்றி பொதுமக்களிடையேயும் அரசுத் தரப்பிலும் அக்கரையில்லாத ஒர் சூன்ய நிலைதான் சுற்றிசுற்றி வந்து கொண்டிருக்கிறது.

உடற்கல்வி என்றால், அது விளையாடிக் கொண்டிருக்கும் வேலையைத் தவிர, வேறு ஒன்றும் கற்பதற்கில்லை விசிலடித்து மாணவர்களே விரட்டிக் கொண்டிருப்பதைத் தவிர, வேறு ஒன்றும் சற்றுத் தரவில்லை என்ற தவறான கருத்து தவழ்ந்து கொண்டிருக்கிறது.

யார் வேண்டுமென்றாலும் அதிலே சென்று பாஸ் செய்து விட்டு வந்துவிடலாம். மூளை தேவையில்லை. முரட்டுத் தனமான தேகம், அல்லது தாக்குப் பிடிக்கக் கூடிய மனோ பாவம் இருந்தால் போதும் என்று பொது மக்களும். எண்ணி ஏசி மகிழ்கின்ற நிலையில்தான் இன்று உடற்கல்வி இருக்கிறது.

ஒரே மாதிரிக் கல்வி என்று இந்தத் துறையில் பயில்பவர்களே நினைக்கின்றார்கள். அடிப்படைப் படிப்பு பிரிக்கின்றார்கள்.ஆசிரியர்களை முதல் நிலை. இரண்டாம் நிலை என்று பகுத்து விடுகின்றார்கள். அதனாலே, எல்லா நிலைகளுக்கு இடையிலும் கல்லா நிலையும் பொல்லா நிலையும் தான் பூரணத்துவம் பெற்று பூசல்கள் விளைவித்துக் கொண்டிருக்கிறதே தவிர, பெருமை தேடித் தரும் நிலையிலே, இந்த படிப்பு நிலை அமையவில்லை என்பதுதான் எல்லாச்