பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஆனால் பாட்டும் கூத்தும் கனஜோராய்ப் போய்க் கொண்டிருந்தது. பாட்டு முடிந்ததும் அவர்களே கை தட்டிக் கொண்டார்கள். அந்த நேரத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்து கொண்டிருந்தது. கொஞ்சநேரம் அதற்காக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.

அந்த ஆட்டம் போட்ட கூட்டம், இப்பொழுது மூண்டியடித்துக் கொண்டு பெட்டிக்குள் ஏற ஆரம்பித்தது.

படித்த பின்ளைகள் இப்படியா ? என்று இடிபட்ட ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டார்.

அவர்கள் கையிலே ஆளுக்கொரு கோல் (Stick) இருந்தது. அதையும் அவர்கள் ஊன்று கோலாக வைத்துக் கொண்டு முரண்டு பிடித்தபடி ஏறினர்.

இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கிறதே ! என்ன அவசரம்? அது அப்படித்தான் என்று பதில் வந்தது ஒரு பயணியிடமிருந்து.

குணசேகர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந் தார். இளேஞர்கள் நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் போல உடை தோற்றம். மாணவர்கள் போலவும் தெரிந்தது. பிறகு ஏன் இப்படி நடுத்தெரு நாட்டியம் ? டேய்க் கூச்சல் ? ஊளையிடுவது போலக் கூக்குரல் ? யார் இவர்கள் ?

பக்கத்தில் நின்ற ஒருவரைப் பார்த்துக் கேட்டா ர் குணசேகர்.

'இவங்க கோயம்புத்தூல நடக்குற ஒரு போர்னமெண்டுக்கு போறாங்க. இந்த மாவட்டத்து சார்பாக ஆடப்போறாங்க.