பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

'இந்தக் களியாட்ட வீரர்கள் எல்லோரும் விளையாட்டு வீரர்கள்' என்று மனதுக்குள் நினைத்த குணசேகர், வெளிப் படையாக அப்படியா ! என்று தலையாட்டிக் கொண்டார். மனதில் ஒரு மாதிரியான குமட்டல்.

ரிசர்வ் செய்திருந்த தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டார். அவருக்குப் பக்கத்தில் விளக்கம் தந்த அவரும் அமர்ந்திருந்தார்.

நீங்களும் கோயம்புத்துார் தான் வருகின்றீர்களா என்று கேட்டார். அவர் தன்னை தம்புசாமி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஆமாம் என்ற குணசேகர், தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ரயில் புறப்பட ஆரம்பித்தது. படபடவென்று பூட்ஸ் ஒலிகளின் வேகம். எட்டிப் பார்த்தார் குணசேகர். ஓடாத வண்டியில் முண்டியடித்துக் கொண்டு ஏறியவர்கள் தான் அவர்கள். இப்பொழுது வண்டி ஒடத் தொடங்கியதும், ஓடிவந்து தாவி ஏறித் தொத்திக் கொண்டார்கள். ஆகா ! என்ன கண் கொள்ளாக் காட்சி !

ஒவ்வொருவனும் ஒவ்வொரு சினிமா பாட்டை விசிலடித்தபடி தங்கள் தங்கள் இடத்தை வந்து அடைத்தார்கள். இடம் பிடித்தவுடன் அவர்களில் ஒரு சிலர் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு சீட்டுக் கச்சேரியைத் தொடங்கி விட்டார்கள்.

இன்னும் சிலர் பீளேபாய் ஜோக்குகள்' சொல்லத் தொடங்கினர்கள். ஒரே சிரிப்புதான். அந்த கம்பார்ட் மென்டில் உள்ள வர்களே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தார்கள் அவரவர்கள் காதை அடைத்துக் கொண்டும், மற்றவர்கள் அவர்களே சர்க்கஸ் மிருகங்களைப் பார்ப்பது போல வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருத்தனர்.