பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏன் ?

நான் அவங்களுக்குப் புதியவன். ஒவ்வொரு பையனும் ஒவ்வொரு இடத்துல இருந்து தேர்ந்கெடுக்கப்பட்டவன். இங்கவந்து பத்துநாள் பயிற்சி முகாமில் சேர்ந்து இருந்தாங்க. அதில் ஏற்பட்ட பழக்கம் ஆளுக்கொரு பழக்கம் எல்லாத்தையும் எல்லாரும் கத்துகிட்டு, அதை இப்படி பயணம் போறப்ப பகிர்ந்துக்குறங்க. பரீட்சை பண்ணி பார்க்குருங்க.

நாளைக்கு காலையில் விளையாடப் போருங்க ! அப்படின்ன உடம்புல தெம்பு இருக்க வேணுமா ? இப்படி கத்தி கலாட்டா பண்ணி, சிகரெட் குடிச்சி, கண்முழிச்சிகிட்டுப் போன, காலையில் என்ன தான் விளையாட முடியும ? குண சேகர் குரலில் குமறல் தெரிந்தது.

இதையெல்லாம் ஆடுறவங்களே உணரணும். கிளிப் பிள்ளை அளக்கு சொல்ற மாதிரி எவ்வளவு தான் சொல்றது ? கடைசியில், என்னையே கேலி பண்றங்க. சில சமயங்களில் இந்த மாதிரி வேலைக்கு ஏன் வர்ரோம்னு கூட, வருத்தம: போயிடுறது !

நீங்க இதுலல்லாம் இரக்கம் காட்டக் கூடாது. சீரியஸா இருக்கணும்.

தம்புசாமி மெளனமானர்.

கூச்சல் இப்பொழுது பாட்டு ரூபத்தில் வந்து கொண்டிருந்தது. பெட்டிகளைத் தட்டித் தாளம் போட்டு, தடித்தனமான நாட்டியம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

இரவு பதினோரு மணியைத் தாண்டி விட்டது. இருந்தாலும் சத்தம் குறையவில்லை. ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் பயணிகள் சிலரைக் கிண்டல் செய்வது போலவும் இதமாஷ் செய்து கொண்டிருந்தனர்.