பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்ப்புரு:Rh 56/



வேண்டும் அல்லது ஆர்வம் மடிந்திருக்க வேண்டும்அல்லது அந்த ஞானமே அற்றுப்போயிருக்க வேண்டும். எப்படித் தீர்மானிப்பது ?.

இவையெல்லாம் இல்லை என்று நாம் எண்ணிக் கொண். டால், எதுவுமே குறைந்து போய் விடவில்லை என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டால், 'இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு" என்று பழம் புராணத்தை பாடிக் கொண் டாலும் பரவாயில் லே ! ஆனால் நாம் ஒன்றை ஒத்துக் கொள் ளத்தான் வேண்டும்.

எங்கேயோ தவறு நடக்கிறது. நடந்து கொண்டு வருகிறது. அதனுல்தான் நாம் எதிர்பார்ப்பது நடக்கவில்லை ! அது ஏன் அப்படி ?

வயலுக்குத் தண்ணிர் போகவேண்டு மென்று வாய்க்கால் மூலமாக கிணற்ற லிருந்து தண்ணிர் இறைக்கிருேம். தண்ணிர் இறைக்கும் வேலை தடயுடலாக நடக்கிறது. தண்ணிரோ தங்கு தடையின்றி தாராளமாகப் போய்க் கொண்டிருக்கிறது. வயலும் வளமாக நனகிறது. வயலில் பயிரும் நடப்பட்டு இருக்கிறது. பயிர்கள் வளரும் ! கதிராய் முதிரும் ! கதிச் களும் கொழிக்கும் ! அயோக விளைச்சலைக் கொடுக்கும்" என்று ஆனால் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருேம். இது நியாயந்தானே !

விளைந்து வருவதோ கதிர் மணிகள் இல்லை. விழுந்து பரவுவதோ பதர்கள், வெறும பதர்கள் என்ருல், செய்கின்ற விவசாயத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதுதானே பொருள் !

காய்களும் கனிகளும் கொடுக்காத ஒரு தோப்பு என்ன தோப்பு !?