பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61


அத்தகைய வலிமையான சமுதாயம் இருந்ததால்தான் கிரேக்கம் உலகுக்கே கலைகளையும், விளையாட்டுக்களையும் வழங்கும் பேராண்மை பெற்று தலைமை வகித்திருந்தது. எப்பொழுது அதின் மக்கள் உட லால் வலிமையை இழக்க ஆரம்பித்தார்களோ - அப்பொழுதே அவர்கள் ரோமானியருக்கு அடிமைப்பட்டு போனார்கள்.

அதனால் என்ன ஆயிற்று? கிரேக்க நாகரிகம் பாழ் பட்டுப் போனது. ஒலிம்பிக் பந்தயங்கள் அழிந்தன? வளர்த்த அவர்களது உன்ன த கலைகள் மறைந்தண. மகிழ்ச்சியோடு வாழ்ந்த மக்கள் வருந்தி ஓலமிட்டுத் தாழ்ந்தார்கள். நாடு சிதைந்தது.

இது ஒரு வரலாற்றுப் பாடம். விளையாட்டை மறக்க ஆரம்பித்த கிரேக்க மக்களின் சிறப்பு மிக்க வரலாறும் சீரழிந்து சின்னா பின்னமாகப் போனது .

நமோ தொடர்ந்து விளையாட்டுக்களையும், உடற்பயிற்சிகளையும் வெறுத்துக் கொண்டே வருகிறோம். அதன் விளைவு களேத்தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டு இருக் கிறோம்.

மாலை நேரங்களில் மைதானங்களில் இளஞ:கள் இருந்து விட்டால், விளையாடத் தொடங்கிவிட்டால், சமுதாயத்தில் தற்போது நிகழ்கின்றது நீசமான நிகழ்ச்சிகளில் பாதி மறைந்தே போய்விடும்.

எவன் ஒருவன் தன் தேகத்தை உயர்வாக நினைக்கிருனே அவன் யோக்கியமான வகை, மானமுள்ள வகை வாழ சிேற்படுகிருன்? இது வரலாறு கூறும் உண்மை.

இந்த உண்மையை நாம் பொதுமக்களிடம் சொன் ளுேமா? இளைஞர்களின் உள்ளம் புரிந்து கொள்ளும்படி எடுத்