பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62


துரைத்தோமா ? பள்ளிகளில் மாணவர்கள் உணர்ந்து பின்பற்றுகின்ற வகையில் காரியங்கள் செய்தோமா?

இன்று விளையாட்டு நிகழ்ச்சிகள், போட் டிகள், எல்லாம் எப்படி நடைபெறுகின்றன தெரியுமா? ஏதோ ஞாபகம் தெரியாத வயதில் இறந்துபோன தந்தைக்கு, தனது ஐம்பதாவது வயதில் திதி செய்கின்ற ஒருமகன து செயலைப் போல.

'இது ஒரு தட்டமுடியாத கடமை..செய்யாவிட்டால் மற்றவர்கள் ஏதாவதுசொல்வார்கள் ' என்பது போலத்தானே நடைபெறுகின்றது! இந்த வெறுப்பு விளையாட்டின் மேல் ஏன் ஏற்பட்டது மற்றவர்களுக்குப் பிடிப்பில்லாமல் போக என்ன காரணம்!

நாம் ஒன்றையுமே கண்டு கொள்ளவில்லை. நேரம் போனால் சரி, நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைத்தால் சரி, என்ற மனப்ப்போக்ல்கி. அல்லவா போய்க்கொண்டிருக்கிறோம்.அத்தகைய மறதியின் விளைவு தான் இந்த மைதானங்களின் அலங்கோலங்கள் .

குணசேகர்தன் நண்பர் முன்பு கூறியிருந்த கருத்துக்களை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டிருந்தார்.

அடுக்குத் தொடராக காரியங்களை ஆற்ற முடியாத சூழ்நிலைகள் இந்த நாட்டில் இருப்பதை இப்பொழுது அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

பொது மக்களுக்கு விளையாட்டு பற்றிய தெளிவு இல்லாமை; பள்ளிக் கூடங்களில் போதிய உற்சாகம் தராமை, இதிலே பணி யாற்றுகின்றவர்களுக்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் தராமல் நடத்தும் தன்மை; இதிலே போதிய அறிவில்லாதவர்கள் இந்தத் துறைக்குள்ளே புகுந்துகொண்டு தங்கள் கருத்தை புகுத்தும் கொடுமை; விளையாட்டுத் துறையினர்களுக்குள்ளே நடக்கின்ற போட்டிப் பொருமை