பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



97

நீங்க என்ன பார்க்க வரலாம். நிச்சயமா கிடைக்கும் என்றார் குணசேகர்.

அங்கே ஒரு பக்கத்தில் வேணு இரும்புக்குண்டை எடுத்து வீசிக் கொண்டிருந்தான், அவன் பக்கத்தில் பயிற்சியாளர் மார்லண்டோ நின்று கொண்டிருந்தார்.

நேசலிங்கம் எங்கே என்று கேட்டபொழுது அதோ பாருங்கள். ஒடிக்கொண்டிருக்கிறான். என்று வடிவேலு காட்டினார்.

மார்லண்டோவிடம் அறிமுகம் ஆனபிறகு, சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டார்கள். வடிவேலுக்கோ , வருமானம் பற்றிய யோசனையாகவே இருந்தது.

காரில் ஏறப்போகும் நேரத்தில், கவர் ஒன்றை எடுத்து இன்பநாதன் வடிவேலுவிடம் நீட்டினர். அது கனமாகத்தான் தோன்றியது.

எவ்வளவு இருக்குமோ என்ற எண்ணத்தில் நன்றி கூட தெரிவிக்காமல் நின்று விட்டார் வடிவேலு.

வடிவேலு ! ரொம்ப நன்றி! அடிக்கடி அவங்களைப் பார்த்து நிறைய புத்திமதி சொல்லணும் லட்சியத்தை நினைவுபடுத்தனும், முன்னேற்றம் இருக்குதான்னு பார்க்சனும். நானும் வந்து அடிக்கடி பார்க்குறேன். உங்களை நம்பித்தான் இந்த முயற்சியில இறங்கி இருக்குறேன் ,

ஐயா! நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க எல்லாம் நம்ம பசங்க, நல்ல பசங்க, வசதியில்லாம கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க... சத்துள்ள உணவும், வேண்டிய டிரெஸும் வந்துட்ட பிறகு, அவங்களுக்கு ஒரு உத்வேகம் வந்திருக்குதுங்க நான் பார்த்துக்கிறேன். நீங்க நிம்மதியா புறப்படுங்க...