பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனையிலும் - சமூகவியலும்

பின்னிப்பிணைந்து...


'வெளிச்சத்தை நோக்கி...” என்னும் இந்நாவலின் பெயரே எழுத்தாளர் சமுத்திரத்தின் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. மனவியலும் சமூகவியலும் பின்னிப் பிணைந்து உருவாகி உள்ள இந்நாவல், டாக்டர். மு.வ. அவர்களின் இலக்கியப் பரம்பரையில் புதிய தடம் பதிக்கிறது. மு.வ. அவர்களின் மேற்கோள் ஒன்று இந்த நாவலில் தரப்படுவதும், குணநலன்களுக்கு ஏற்றபடிக் கதாநாயகனுக்கு மெய்யப்பன் என்று பெயர் சூட்டப்படுவதும் கவனிக்கத்தக்கவை.

அறிவை விசாலமாக்கி, சேவையின் எல்லையை விரிவாக்கி, தனி மனிதன், சமூக மனிதனாக மாறவேண்டும். கார்ல் மார்க்சும் சரி, காந்தியடிகளும் சரி, சமூகச் சிந்தனையை விரிவாக்குவதையே வற்புறுத்தியதைத் திரு. சு. சமுத்திரம் சுட்டிக் காட்டியுள்ளார். த மி ழ் நா ட் டு இ ளை ய தலை மு றை யி ன ர் அனைவரிடமும் இருக்கவேண்டிய இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்கள் புத்தக நிலையத்திற்கு அளித்த சு. சமுத்திரம் அவர்களுக்கு நன்றி.

திருவரசு புத்தக நிலையத்தார்,
சென்னை - 600 017.