பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 111


என்னைப் பார்க்கவோ... ஏன்னு கேட்கவோ... யாரும் கிடையாது. அதனாலதாம்மா கேட்டேன்... தயவுசெய்து தப்பா நெனைக்காதீங்க... நீங்க காலுலதான் முடம்... நான் மனசுல முடமாய் போயிட்டேன். தயவுசெய்து அன்றைக்குப் பேசியது மாதிரி பேசிடாதிங்கம்மா..." என்றான்.

சத்யா, முந்தானைச் சேலையை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு, பிஞ்சுக் கால்மேல் கையை ஊன்றியபடி, இழுத்து இழுத்து நடந்துகொண்டே, உள்ளே போனாள். பாதி வழியில் திரும்பி, அவனைப் பார்த்தாள். அவன் உடலில் கருகிப்போய், திட்டுத்திட்டாய், கருஞ்சாம்பலாய் ஆகிவிட்ட பகுதிகளைப் பார்த்தாள். அவற்றைக் கழுவிவிடத் துடிப்பதுபோல், கண்கள் நீரைக் கொட்டின. கால்கள் போக மறுத்தன. கைகள், ஒன்றை ஒன்று, நெறித்துக் கொண்டன. மெய்யப்பன், அவளை, உதடுகள் விலகப் பார்த்துக் கொண்டே நின்றான். அவள் உள்ளே போய் விட்டாள். வீட்டுக்குள் அழுகைக் குரல் கேட்டது... இதுவும் நல்லதுக்குத் தான்... சாகும்போது, ஒப்பாரி வைக்கவாவது ஒரு ஆள் இருக்கிறது. எவளோ ஒருத்தி, ஏதோ ஒரு மனிதாபிமானத்தில், தனக்காக வருந்துகிறாள் என்று நினைத்தபோது, அவனுக்கு லேசாகத் தெம்பு வந்தது. பொய்மை உணர்வுகள் போனதுபோன்ற ஒரு சுகம். திடீரென்று பசியெடுத்தது. சீக்கிரமாய் போகலாம்.

மெஸ்காரர் பாக்கியை வசூலிப்பதற்காக ஒரு பையனை அனுப்பி வைத்திருந்தார். "நாளைக்கு பாக்கி வராட்டால், கையில இருக்கிற கடிகாரத்தை பிடுங்க வேண்டியதிருக்கு முன்னு முதலாளி சொல்லச் சொன்னார்" என்று அக்கம் பக்கம் கேட்கும்படிச் சத்தம்போட்டு விட்டுப் பையன் போய் விட்டான். அப்படி, நூறு பேருக்குக் கேட்கும்படிக் கத்த வேண்டும் என்று பையனுக்கு முதலாளி சொல்லிக் கொடுத்திருப்பது மெய்யப்பனுக்குத் தெரியாது... கையில் பைசா இல்லை... கனகத்திடம் மோதிரப் பணத்தைக்