பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 வெளிச்சத்தை நோக்கி...

பிரபஞ்சத்தையே பிரதிபலிக்க வைக்கலாம் என்றார்கள். இதற்கு சரியை, கிரியை, யோகம் என்று வழி முறைகளையும் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்."

"திருமூலர் சொன்னதுபோல், 'உடம்பார் அழிந்தால், உயிரார் அழிவர். இந்த உடம்பு, ஒரு கோவில்; ஆன்மா, அந்தக் கோவிலின் தீபம், உடம்பைப் பேணினால், உள்ளொளி தானாய்த் தோன்றும். ஆகையால், நாளையில் இருந்து, புஜங்காசனம், தனுராசனம், மயிலாசனம், சர்வாங்காசனம், சிரசாசனம் போன்ற லகுவான ஆசனங்களைப் போட்டுப் பழகு. உடம்புக்குப் பயிற்சி கொடுப்பதுபோல், மனத்திற்குப் பயிற்சி கொடுப்பது யோகம் எனப்படும். அதற்கு, இதோ சொல்கிறேன். கேள்..."

"பிரபஞ்சத்துக்கு மூலாதாரமானது ஒளி. ஒளியின்றி உடம்புய்ய வேறு வழி இல்லை... இதனால்தான் வள்ளலார் இதை, 'அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை' என்றார். தினமும். இரவில், குத்துவிளக்கில் தீபமேற்றி... அதன் முன்னால் உட்கார்... அந்த ஜோதியையே உற்றுப் பார். அதுதான் 'நீ 'என்று எண்ணிப்பார். பிறகு, அந்த ஜோதி, உள்முகமாய் வாய்க்குள் வருவதாக பாவனை செய். ஐந்து நிமிடம் வாய்க்குள் நிற்க வைத்துவிட்டு, அந்த ஜோதியை தொண்டை இருதயம், உந்தி, அடி வயிறு, பிறப்புறுப்பு, குதம் வழியாகக் கொண்டு வந்து - அதாவது ஐந்தாறு நிமிடம் நிறுத்தி, நிறுத்தி, கொண்டு வா.... பின்னர், அதை முதுகுத்தண்டு வழியாக முகுளமான பின் தலைக்குக் கொண்டு வா.... அங்கிருந்து அதை இரண்டு காதுகள், கண்கள், மூக்குத் துவாரங்கள் வழியாய் நெற்றிப் பொட்டிற்குக் கொண்டு வா... அங்கிருந்து, உச்சந்தலையின் உள்முகப்பில் நிறுத்து... தீபம் எரியட்டும்... தீமைகள் பொசுங்கட்டும்... ஜோதியின் உள் முகப் பாவனையே, பாவனை போலான மாயையை, வெளிமுகமாக்கி விரட்டும்.... ஆனால், இந்த அப்பியாசத்திற்கு பின்னணியாய் சாந்தி வேண்டும். இந்த சாந்தியையும் பெளதீக விதிகளாலேயே,