பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 வெளிச்சத்தை நோக்கி...

பெண்ணில், தாயின் தரிசனத்தைக் கண்டவன்போல் குழைந்தான்.

ரகுராமன் சுறுசுறுப்பாக எழுந்தார். "நாங்க இரண்டு பேரும்... அதோ அங்கேபோய் இவர் எழுதிக் கொடுத்ததை... ஸ்டடி பண்றோம்.... இங்கேயே இருங்க... இல்லன்னா... இந்த காம்பவுண்ட்டுக்குள்ள சுற்றி வாங்க... அரைமணி நேரம் கழித்து வாங்க.."

"இல்ல ஸார்... இங்கேயே உட்கார்ந்திருக்கோம்."

ரகுராமனும், அவர் மனைவியும், வீட்டுக்கு வெளியே தனித்துக் கட்டப்பட்டிருந்த ஒரு சின்னக் கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள். மெய்யப்பனும், குமாரும் அங்கே உட்கார முடியாமல் வெளியே வந்து, அங்குமிங்குமாக உலாவினார்கள். அரைமணி நேரமாகியும், அவர்களைக் கூப்பிடவில்லை. ஒரு மணி நேரமாகியும் கூப்பிடவில்லை. மெய்யப்பனுக்குப் பயமெடுத்தது. ஒருவேளை, தனக்கு வந்திருப்பது தீர முடியாததோ...? தீர முடியாது என்றால், ஐந்து நிமிடத்தில் அவனை அனுப்பித் தீர்த்திருப்பார்களே...

இருவரும் அந்தத் தனித்த அறைப் பக்கமாக வந்தார்கள். உள்ளே கணவனும், மனைவியும், தொழில் ரீதியில் எதையோ ஆதரித்தும், மறுத்தும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது உள்ளே பேசுவது, வெளியே அவர்களுக்குக் கேட்டது. இருவரும் சூடாகி இருப்பதுபோலவும் குரல்கள் காட்டின.

"இல்ல ரமா... இது சிசோபிரினியாவா (Schizophrenia) இருக்க முடியாது.... இதுல நோயாளி அப்படியே நம்புவார்..‌. நாயைப் பார்த்ததும் கடிக்கிற மாதிரி தெரிந்தால், கடிக்கிற மாதிரியே வலிக்கும். கடிக்கிற மாதிரியே நம்புவார்... தரை, பாதாளத்துக்குப் போறது மாதிரி தெரிந்தால், நோயாளியும் பாதாளத்துக்குள்ள சிக்குறது மாதிரி நம்பித் தவிப்பார். அவருக்கே சில சமயம், அந்த உணர்வு போலின்னு தெரிந்தாலும், அந்த உணர்வு வரும்போது, அதை அப்படியே நம்புவார்... இந்த 'டெலூஸன்ஸ்' மெய்யப்பன் கிட்ட