பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

167



மெய்யப்பன் உள்ளே எட்டிப் பார்த்தான். சத்யா தன் அண்ணன் மகன், மூன்று வயதுப் பொடியனை, மார்போடு அணைத்தபடி வெளியே வந்தாள். முகத்தில் புல்லில் படர்ந்த பனித்துளிகள் போன்ற வேர்வை. துக்கத்தைச் சிறை செய்ததுபோல் கன்னம் உப்பியிருந்தது. அண்ணன் மகனிடம் அழாத குறையாக ஆணையிட்டாள்.

"டேய்... நீ இங்கேயே இருக்கணுண்டா. அவர் சொன்னார், இவர் சொன்னார்னு எங்கேயும் போகப் படாது. அப்படிப் போனால், என்னால தாங்க முடியாதுடா... 'நீ யார் சொல்றதுக்கு'ன்னு கேட்கிறியா... அதுதாண்டா எனக்கும் புரியல..."

மெய்யப்பனுக்குப் புரிந்தது. கேட்டைத் திறந்துவிட்டு, அதை மூடும் சாக்கில், அவளை நேராகப் பார்த்தான். என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. சத்யா முகத்தை விலக்கிக் கொண்டாள். அண்ணன் மகனை, கீழே விடமாட்டேன் என்பதுபோல், தோளோடு அணைத்தபடி, துவண்ட நடையோடு போய்க் கொண்டிருந்தாள்.

மெய்யப்பன் தான் சொன்ன சொல்லுக்கும், சத்யாவின் சொல்லாத சொல்லுக்கும் இடையே தவித்து, அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் வழி தெரியாது நடந்து கொண்டிருந்தான்.

22

சைக்கியாட்ரிஸ்ட் ரகுராமன், மெய்யப்பனைச் சாய்வுப் படுக்கையில் சரித்துப் போட்டிருந்தார். அவன், வெளி மனதுக்கும் அடிமனதுக்கும் இடையே, தூங்காத தூக்க நிலையில் கிடந்தான். உடலில்லாமல், உள்ளம் மட்டும்