பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

வெளிச்சத்தை நோக்கி...

இப்போ தலைவனாகி இருப்பேன். பேசாமல் போயிட்டேனே... ஏமாந்துட்டேனே்... தலைவனாக முடியாமல் போயிட்டே... அய்யோ... உலகத்துல எல்லாரும் அயோக்கியர்களாய் இருக்கும்போது, நான் மட்டும் ஏன் யோக்கியனாய் இருக்கணும்..."

"சரி மெய்யப்பன், உலகத்துல... எல்லோரும் அயோக்கியர்களாய் இருக்க முடியாது. அன்புள்ளம் கொண்டவர்களும் இருக்கிறாங்க... பார்ப்போமா... இப்போ...ஒங்க அறையில் இருந்து வெளில வாறிங்க... உங்ககிட்ட அன்பு காட்டுறதுக்கு ஒருத்தரும் இல்லையா..?”

"இருக்காள். சத்யா இருக்காள். எனக்காக அண்ணன் கிட்ட அடிபட்டாள். நான் தற்கொலை செய்யப்போகும் போது, கையெடுத்துக் கும்பிட்டாள். அழுதாள்... இன்றைக்குக் கூட, நான் அந்த அறையைக் காலி செய்துடுவேன்னு கலங்கினாள். சத்யா, என் தெய்வமே, என் தோழியே... என் தாயே... என் கடவுளே... நீ காட்டுற அன்புக்கு ஈடில்லை... ஒன் கண்ணே கருணை... பார்வையே பாசம்... சத்யா... என் சத்யா... ஒன்னை விட்டுட்டுப் போகமாட்டேன்... கலங்காதே சத்யா, சத்யமாய் போகமாட்டேன்..."

"சரி, இப்போ அலுவலகத்தில இருக்கிங்க... உங்கள் மேல் பாசம் காட்ட ஆளில்லையோ..."

"இருக்கான் ஸார். குமார். உயிர் காக்கும் தோழன்... ஒருநாள், ஏதோ மானேஜர் எரிந்து விழுந்ததுல நான் சா ப் பி ட ல . . . கு மார் சாப் பி டச் சாெ ன் னா ன் மாட்டேன்னுட்டேன். உடனே, ரெண்டு பேருக்கும் கொண்டு வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தை முனுசாமி கிட்ட கொடுத்துட்டு... தண்ணீர்கூட குடிக்காமல் இருந்தான். விமலாமேல் இருந்த மோகத்துல, என் நண்பனை பல தடவை உதாசீனம் செய்திருக்கேன். அவன் ஒரு தடவை கூட அப்படி நடந்துக்கல...”

"சரி... இப்போ. நீங்க சின்னப் பையன். யாருமே அன்பு காட்டலியா..?”