பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

171



"ஏன் இல்ல... எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்ல. வயலுல கூலி வேலை பார்க்கற மாரிச்சித்தி இருக்காள். தெருவில விளையாடுற என்னை வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டுப் போய் வாய்ல சோறு ஊட்டுவாள்... அவளே என்னைக் குளிப்பாட்டி விடுவாள். மாரிச்சித்தி இறந்துட்டாள். அப்போ நான் எங்க பெரியம்மா வீட்ல இருக்கேன். மாரிச்சித்தி இறக்கும்போது ஜன்னியில என் பேரைக்கூட உளறுனாளாம். 'மெய்யப்பா... விளையாட்டு போதும்... ஒன்பாட்டி... என்னத்தைக் கொடுத்திருப்பாள். வாடா... கருவாட்டுக் குழம்பு இருக்குன்னு' பிதற்றுனாளாம். அந்தத் தாய் இறந்துட்டாள். ஒரேயடியாய் போயிட்டாள்..."

"சரி. இப்போ நீங்க பழைய வேலைக்கு வந்துட்டிங்க. ஆபீஸ்ல வேலை பார்க்கிங்க... விமலா உதறினாள். கடற்கரையில் அவளை நினைத்தபடியே, உட்கார்ந்து இருக்கீங்க.. கடலையே பார்க்கிங்க... என்ன தோணுது..."

"வானம் அழுகுது. கடல் விம்முது..."

'அழட்டும்... விம்மட்டும்... நீங்க சோகத்தோட திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்ட் பக்கம் வாரிங்க... என்ன தெரியுது...”

"எல்லாமே சத்யா மயமாய் தெரியுது..."

"சத்யா மயத்தோடு, சத்தியமயமுன்னும் ஒண்ணு இருக்கே. என்ன தோணுது..?”

"நல்லா பார்த்துச் சொல்லுங்க... ஜனங்க தெரியல... எப்படித் தெரியுது... நல்லா பார்த்துச் சொல்லுங்க..."

"பிளாட்பாரத்துல... ஒரு குழந்தை வயிறு வீங்கிக் கிடக்குது... கால் சிறுத்த குழந்தை... கவனிக்க ஆளில்லாமல் நடக்குது... ஒரு கிழவி... ஈயப் போணியையே, தலையணையாய் வச்சு முடங்கிக் கிடக்காள். ஒரு கர்ப்பிணிப் பொண்ணு, வயிற்றைப் பிடிச்சுக்கிட்டு அழுகிறாள். நாலு கல்லை நிறுத்தி, ஒரு அம்மா சோறு பொங்கப் போறாள்... அதுக்குள்ள, போலீஸ் வேன் வந்து, அவளை வாரிப்போட்டுக்கிட்டு