பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்தரம் 27

பேச இஷ்டம் இல்லைன்னா... குமார் மாதிரியாவது ஒன்கிட்ட மனுஷி பேசுவாளான்னாவது சொல்லு... ஆனால், பேசாமல் மட்டும் போகாதம்மா... ஒன்னைத்தான் விமலா.‌.. என் முகத்தைப் பாரு..‌. இது இருக்கிற தவிப்பைப் பாரு..‌. இந்த கண்ணுங்க இருக்கிற கோலத்தைப் பாரு... ஒன்னை... காதலி என்கிற முறையில கேட்கிறேன்... நான் என்ன தப்பு செய்தேன்...? எதுக்காக என்னை இப்படி உதாசீனம் பண்ணுறே... அதை மட்டுமாவது சொல்லு..."

விமலா கடிகாரத்தைப் பார்த்தாள். அதிலிருந்து கண்களை விலக்காமலே பதிலளித்தாள். "நீங்க... எது எதையோ நினைத்துக் கற்பனை பண்ணினால், அதுக்கு நான் பொறுப்பில்லை..."

"ஒன்னை எதுக்கும் பொறுப்பு ஏற்கச் சொல்லல... ஆனால், மனந்திறந்து உண்மையைச் சொல்லுன்னுதான் கேக்கிறேன்... இன்றைக்கு... அலுவலகத்தில வேலை பார்க்கறவங்களும், நடுத்தர வர்க்க மக்களும், யந்திர கதியாய் ஆனதுக்குக் காரணமே அவங்க... மனசை மூடிவச்சு... அதை அழுக வச்சதுதான்... நான் எப்பவோ படித்ததைச் சொல்றேன் கேளு... இதயம் ஒரு பூ... அதில் உண்மை என்கிற காற்று... வாய் வழியாய் வீசணும்... இல்லன்னா... அது அழுகிவிடும். இதயமும் உண்மையும் இரும்பும் காந்தமும் மாதிரி ஒன்றை யொன்று ஈர்க்கணும்... அதனால... நான் கேட்கிறதுல்லாம் உண்மையைச் சொல்லுன்னுதான்..."

விமலா உண்மையைச் சொல்வது போல் தான் சொன்னாள். "இந்தக் காலத்துல நெருங்கிப் பழகுறதே தப்பாப் போயிடுது... நான் ஒங்ககிட்டே சகோதர வாஞ்சையோடுதான் பழகினேன். சகோதரி மாதிரிதான் நடந்துக்கிட்டேன்."

மெய்யப்பன், திடுக்கிட்டுப் போனான்... அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அது காய வைத்து சிவப்பான இரும்புபோல் தோன்றியது அவனுக்கு தன் ஆண்மையின் மீதுகூட சந்தேகம் ஏற்பட்டது. இவ்வளவு நாள் மனம்