பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 39

அதிர்ச்சியில் மூழ்கினான். இப்போது ஆனந்தம் போய் விட்டது. அதிர்ச்சிதான் நிற்கிறது.

மெய்யப்பன் நடந்ததை நினைத்து நினைத்து, சுய நினைவில்லாதவன் போலவே படுத்துக்கிடந்தான். தெருவே உறங்கிப்போன சுரணை இல்லாமல், முடங்கிக் கிடந்தான். நினைவு முடங்கி, நெஞ்சம் முடங்கி, எல்லாமே முடங்கியதுபோல், அவன் போர்வையைத் தலை முழுவதும் மூடியபடி, லேசாகக் கண்மூடியபோது, ஒரு உலுக்கல் சத்தங் கேட்டுக் கண்விழித்தான். பிறகு,எந்தவித சலனமுமில்லாமல் அப்படியே கிடந்தான்.

வீட்டுக்குள்ளே, இன்னொரு போர்ஷனில், ஒரு பெண், "அடிக்காதண்ணா... அய்யோ அண்ணா... தெரியாமல் உடைச்சிட்டேன் அண்ணா..." என்று ஓலமிடுவதும், அந்த ஓலத்திற்குத் தாளம் சேர்ப்பதுபோல், 'டப்பு டப்பென்று' சத்தங் கேட்பதும் அவன் காதுக்குள் போயின.

காலில் ஊனங் கொண்ட ஒரு இளம் பெண் பக்கத்துப் போர்ஷனில் கணவனால் ஒதுக்கி வைக்கப்பட்ட பிறகு, அண்ணன் வீட்டில் வந்து வாழ்கிறாள். வாழ்கிறாளோ... அல்லது ஒரு கவிஞர் சொன்னதுபோல், வாழ்வதுபோல் சாகிறாளோ.

(6)

மறுநாள் மெய்யப்பன் புதிதாக அலுவலகத்திற்குப் போவதுபோல் போனான். சாதகமாகத் தீரும் என்று நினைத்த விவகாரம் பழையதாய் போனதில், அவனுக்கு அனைத்தும் புதிதாகத் தெரிந்தன. "வணக்கம் தலைவரே" என்று வழக்கம்போல் சிரித்துக்கொண்டே கும்பிடு போட்ட பியூன் முனுசாமி, அவனை அன்றுமட்டுமல்ல, அத்தனை