பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 43


"இன்னும் நீங்க சமாச்சாரத்துக்கு வரலக்கா..."

"அவரு உயிரோட இருக்கது வரைக்கும்... இந்த மானேஜர், என் வீட்டுக்கு வந்திருக்கார். தங்கச்சி, தங்கச்சின்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவார். அப்படிப்பட்ட மனுஷன்... நேற்று என் கையை வலுக் கட்டாயமா பிடிச்சுக்கிட்டு... 'நாளைக்கு... சினிமாவுக்குப் போகலாமான்’னு கேட்கிறார். என்னை சினிமாக்காரியா நினைச்சுட்டார் பாரு... நான் அந்த அதிர்ச்சியிலயும், நிதானமாய், 'நான் ஒங்களை என் கூடப் பிறக்காத அண்ணனா நினைக்கேன்’னு சொல்லிப் போனேன். இதை விட ஒரு பெண்ணு எப்படி பதில் சொல்ல முடியும்...? ஆனால், இன்னைக்குக் காலையில் வந்ததும், டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டேன்’னு சொல்றார்... இப்போ நான் புறப்படப் போனதைத் தெரிஞ்சுகிட்டு கூப்பிடுறார்...போனால், நான் புனிதமாய் நினைத்துக் காப்பாற்றுவது போகும்... மீறி, வீட்டுக்குப் போனால்... ஒரேயடியாய் அங்கேயே இருக்க வேண்டியதாயிடும்... என் நிலையைப் பார்த்தாயா... எப்படி இருந்தவள் எப்படி ஆயிட்டேன் பார்த்தியா... அவரு இருந்தால்... அவரு... இருந்..."

வாணி தன்னை தவிக்க விட்டுப்போன கணவனை நினைத்து அழுவதுபோல் அழுதாள்.தனக்காக அழுதாள்.தன்னை நம்பி நிற்கும் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்காக அழுதாள்.எல்லாவற்றிற்கும் மேலாக, விதவைப் பெண்ணென்றால்,அதுநண்பனின் மனைவியானாலும் பரவாயில்லை என்பது போல் நினைக்கும் ஒரு மனிதனின் மிருக உணர்வை நினைத்து அழுவதுபோல் அழுதாள்.

மெய்யப்பன் அவளையே பார்த்தபடி நின்றான். அவள் கணவர், இதே அலுவலகத்தில் உதவி மானேஜராக இருந்தவர். கலகலப்புக்குப் பெயர் போன மனிதர். ஊழியர் ஒருவரால் பிரச்சினை ஏற்படும்போது, பொதுவாக பிரச்சினையைப் பற்றிப் பேசாமல், பிரச்சனையைக் கிளப்பும் மனிதனையே ஒரு பிரச்சினையாகக் கருதி விவாதிக்கப்படும் இந்தக்