பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

அலுவலகத்தில் பாதி இடத்தை ஆக்கிரத்திருந்த விசாலமான அறை. சன்மைக்கா மேஜைமேல் இருந்த 'இண்டர்காம்', வெளிர் மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. அரைவட்ட மேஜையில், இரண்டு டிரேய்கள். எதிரே நாற்காலிகள். ஒரு ஓரத்தில் சோபா ஸெட் வெல்வெட் கம்பளம் விரித்த தரை. நீல டிஸ்டெம்பர் அடித்த கவர்களில் விதவிதமான டிசைன்கள் போட்ட ஓவியங்கள். பெரும்பாலும் 'தழுவல்' ஓவியங்கள். ஆணும் பெண்ணும் அரை நிர்வாணத்துடன் தழுவும் 'மாடர்ன் ஓவியங்கள்'. பத்தமடை பட்டுப்பாய் விரிப்பு, தீபம் ஏந்திய கட்டழகியைக் காட்டியது. எலெக்டிரானிக் சுவர் கடிகாரம் நேரத்தை மின்வெட்டாய் காட்டிக் கொண்டிருந்தது.

மானேஜர், கரையான் புற்றுக்குள் போன பாம்புபோல், தலைவிரித்துப் பார்த்தார். காட்ரெஜ் பீரோவைத் திறந்து அந்த 'அந்தரங்க' ஃபைலை மீண்டும் பார்த்துவிட்டு, பீரோவைப் பூட்டினார்.

காலிங் பெல்லை அழுத்தினார். பியூன் முனுசாமி வந்தான். “வாணியை வரச்சொல்” என்றார், முனுசாமியின் முகத்தைப் பார்க்காமலே, பிறகு நமைச்சல் எடுத்த உடம்பைச் சொறிந்து கொண்டு, டிராவைத் திறந்து, ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு பிளாஸ்கைத் திறந்து வெந்நீரைக் குடித்தார்.

ஒரு நிமிட நேரத்தில் வாணி வந்து நின்றாள். துச்சாதனன் துகிலுரியும்போது திரெளபதி பார்ப்பதுபோல், ஒருவித பாவமான கண்களுடன் பல படங்கள் இருக்கிறதே, அது மாதிரியான பாவத்துடன் வாணி அவரைப் பார்த்தாள். இந்த ஒருவார காலத்தில் அவள் மதர்ப்பான மேனி,