பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னுரை


"வெளிச்சத்தை நோக்கி." என்ற இந்த நாவல், நான் மிகவும் ஒன்றிப்புடன் எழுதிய படைப்பாகும். திரு. வலம்புரிஜான் அவர்களை ஆசிரியராகக் கொண்ட "தாய்" பத்திரிகையில் தொடர்கதை லட்சணங்களோடு எழுதாமல், நாவல் மாதிரியே எழுதப்பட்டது. இதற்காக வலம்புரிஜான் அவர்களுக்கும், இந்த நாவல் வெற்றிபெற உறுதுணையாக இருந்த கீதப்பிரியன் அவர்களுக்கும் இன்றளவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன்.

நான் டெல்லியில் பணியாற்றியபோது, ஒரு இளைஞனுக்கு நேர்ந்த மனநோயையும், அவனிடம் ஈடுபாடு கொண்ட என்னையும் இணைத்து உள்ளதை உள்ளபடி எழுதிய நாவல். உண்மை நிகழ்வை எழுதியதால் மனநோய் பற்றிய ஆராய்ச்சி நூல்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், டெல்லி வெலிங்டன் மருத்துவமனையில் அந்த இளைஞனுக்கு சிகிச்சை செய்த மனநோய் நிபுணரும் - மனநோய் மருத்துவரும் விவரித்த விவரங்களை இந்த நாவலில் சேர்த்திருக்கிறேன். இதில் வரும் வசிய சிகிச்சை முறையும் நான் கண்ணாரக் கண்டது.

பொதுவாக, "சிசோபோனியா" (Schizophrenia) என்று கூறப்படும் மன அழுங்கு நோய்க்குரிய அத்தனை வெளிப்பாடுகளும் அந்த இளைஞனுக்கு இருந்தது.இந்த நோயில் சிக்கு பவர்களுக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதோ, தங்களுடைய செயல்பாடுகளோ தெரியாது. ஆனால் கெட்ட வேளையிலும் ஒரு நல்லவேளையாக, இந்த இளைஞனை பிடித்த மனநோய் தீவிர நரம்புத்தளர்ச்சி (Compulsive Neurosis) என்ற வகையைச் சார்ந்தது. இதனால் இவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது நன்றாகவே தெரிந்தது. இதனால் ஒருவகையில் மனவேதனையும் அதிகரித்தது என்று சொல்லலாம். ஆனாலும், இது நரம்புத் தளர்ச்சி முற்றிய நிலையில் அமைந்த மனநோய் என்பதால், இந்த இளைஞனுக்கு வசிய சிகிச்சை முறை கைகொடுத்தது.இதுவே