பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 வெளிச்சத்தை நோக்கி...

எண்ணம். வயிற்றுக்குள் குடல் எரிந்து கருகுவது போன்ற நினைப்பு.

இதற்குள் ரவி வந்துவிட்டான். மானேஜரிடம் போய் ஒப்புக்கு இரண்டு நிமிடம் பேசிவிட்டு, விமலாவுக்கு எதிரே இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டான். வாணியை, மானேஜர் உள்ளே கொண்டுபோய் விட்டார்.

மெய்யப்பன், தன் நாற்காலியில் உட்கார முடியாமல் தவித்தான். நாற்காலியில் சூடு பரவி, அவனையும் பற்றுகிறது! இரண்டு கால்களும், இரண்டு கார்களால் பிரிக்கப்படுகின்றன. பஸ் சக்கரம் வயிற்றில் ஏறி நிற்கிறது. எங்கோ ஒரு நாய் குலைக்கிறது. அங்கே குலைத்த நாய், இங்கே மானசீகமாக வந்து, அவன் குடலைக் கெளவி இழுக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பியூன் முனுசாமி, மெய்யப்பனிடம் வந்தான். தலையைச் சொறிந்து கொண்டு "தலைவரே. நான் சொன்னதை தப்பாய் எடுத்துக்காதே... வாணியம்மா சொன்னதுமாதிரி.... நான் ஒன்னை புண்படுத்திட்டேன்... மன்னிச்சிடு... ஒன்னோட சித்தப்பிரமை தெரிஞ்சும், நான் பைத்தியம் மாதிரி பேசிட்டேன்..." என்றான்.

மெய்யப்பன் முனுசாமியை பரிதாபப்படுவதுபோல் பார்த்தான். 'அசல் அப்பாவி. தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டான். தெரிந்ததும் வருந்துகிறான். ஆனால், இந்த பாஷ்யம் சினிமாக் கதை சொல்வது மாதிரியல்லவா சொல்லிவிட்டார்! அவர் கிடக்கட்டும். மற்றவர்கள் கூட விழுந்து விழுந்து சிரித்தார்களே... மருந்தாக வேண்டியர்களின் பொழுதுபோக்கிற்கு விருந்தாகி விட்டேனே... மீனாட்சி... ஞாபகம் இருக்குதாம்மா.... ஒன் தங்கைக்கு பரீட்சைக்கு பீஸ் கட்ட பணம் இல்லன்னு யதேச்சையா சொன்னே... நான் அனிச்சையா பணந் தந்தேனே... தந்த பணத்தை எண்ணிப் பார்த்தது மாதிரி என்னையும் எண்ணிப் பாரும்மா.... கனகம், நான் மோதிரம் தந்ததை சொல்லல...‌. ஒருநாள் பஸ்