பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வெள்ளிக்கிழமை அவளை யாரும் பார்த்துவிடமுடியும். இப்போது அழகப் பன் அவளை நிச்சயமாகப் பார்த்துவிடப்போகிறான். அவள் உடனே தன் கதையைச்சொல்லி அழப்போகிறாள். அழகப் பனும் நம்பிவிடப்போகிறான். பிறகு தன் திட்டமெல்லாம் விழலுக்கிறைத்த நீராகப்போய்விடும். இவ்வாறு எண்ண மிட்டவனாய் டைகர் துடித்துக்கொண்டிருந்தான். போலீஸ் வண்டியின் படிகளில் அவள் ஏறி வண்டிக்குள் நுழையும் போது, அழகப்பன் அவளைக் காண விரும்பி அருகே அவ சரமாக வந்தான். அவன் வருவது அவளுக்கும் தெரியாது. அவனுக்கும் அவள்தான் சிந்தாமணி என்றும் தெரியாது. வண்டியில் நுழையும்போது முகத்தைத் திருப்பி, மக்களைப் பார்த்திருப்பாளேயானால் அவளை அழகு, உடனே அடை யாளம் கண்டிருப்பான். அவள் எதற்காக மக்கள் பக்கம் முகத்தைத் திருப்பப்போகிறாள்! பொதுஜனக் கோரிக்கைக் காகப் போராட்டம் நடத்தி அடக்குமுறைக்கு ஆளாகிச் சிறை செல்லும் 'சமூக சேவகியா அவள்? இல்லை! சமுதா யத்தின் கழிசடை' யாகி விட்டவள். கன்னி கழியாப் பருவத்திலே கருவுற்று, அபின் கடத்தும் தொழில் நடத்தி ஜீவிக்கும் மனிதப்புழு என சமூகத்தால் வர்ணிக்கப்படும் நிலையிலே உள்ளவள். அவள் ஏன் மக்களைத் திரும்பிப் பார்க்கப்போகிறாள்! திரும்பவில்லை. அதனால் அழகப்ப னும் அவளைப் புரிந்துகொள்ளவில்லை. பேதையின் பின்ன ழகை மட்டுமே கண்டான். 6 "கொஞ்ச வயசுக்காரிதான் அம்மா!" என்றான். “பலே கைகாரி போலிருக்கு!" என்றாள் தாய் ! அந்தத் தாய்க்கு மருமகளாக வந்திருக்கவேண்டிய மாணிக்கப் பதக்கம், சீந்துவாரற்றுச் சீரழிந்து போய் விட்டது. "போலீஸ் வேன் புறப்பட்டது, புழுதியில் வீசப்பட்ட அந்தப் புனிதவதியை ஏற்றிக்கொண்டு! அழகப்பனும், தாயாரம்மாளும் வாடகைக்கார் ஒன்றில் ஏறி வீடு நோக்கிப் புறப்பட்டனர் அழகப்பனின் விலாசத் தைத் தெரிந்துவைத்துக்கொள்ள விரும்பிய டைகர், இன் னாரு வாடகைக் காரில் பின்தொடர்ந்தான். அழகப்ப