பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 59 "என்னய்யா ஒரே குழப்பம்! நான் பார்த்தது சிந்தா மணியே தான் -பக்கத்திலேயிருந்தது அவள் குழந்தையே தான் - நீர் கூறும் தங்கத்திற்குப் பொருள் என்ன விளக்கும்!" 66 அவசரப்படவேண்டாம். கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய். தீர விசாரிப்பதே மெய்-என்ற பழமொழியை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது! சிந்தாமணியின் யிருந்தது அவள் குழந்தையல்ல!” " 5T 607 OUT? என்ன? என்ன சொல்கிறீர்?" துள்ளிக்குதித்தான் அழகப்பன். அருகிலே என்று "உண்மையைத்தான் சொல்லுகிறேன். சிவநேசரின் குடும்பத்திற்கு ஆகாத பகைவர்கள் ஆனந்திக்குப் பணத் தாசை காட்டி, இப்படி ஒரு பஞ்சமா பாதகத்தைச் செய்து விட்டார்கள்! அந்தக் கொலைக்கஞ்சாக் கொடியவர்களின் ஆசைவார்த்தையிலே மயங்கி ஆனந்தியும் சிந்தாமணி யைச் சேறு என மெய்ப்பிப்பதற்கு முற்பட்டு விட்டாள். பகைவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், அந்த வெற்றிக்குப் பிறகுதான் போராட்டம் ஆரம்பமாயிற்று. ஆனந்தியின் மனப்போராட்டமே அது! அந்தப் போரை வலுப்பெறச் செய்தேன் நான்! 'மருத்துவர் உலகிற்கே மாசுண்டாக்கிவிட்டாய்!" எனக் குற்றஞ்சாட்டினேன். இறுதியில் உண்மை வென்றது. திடீரென ஒருக்கணல் தீ போலச் சூழ்ந்த தீய நினைவு ஆனந்தியின் உள்ளத்திலே அணைந்தது - தர்மத்தைக் காப்பாற்ற தங்களை நாடி ஓடி வந்தாள்! இப்போது அவளுக்குப் பதிலாக நான் பேசு கிறேன். சிந்தாமணி தங்கமானவள்!” 66 ய 'நம்பாதே அழகப்பா, நம்பாதே! இந்த நாடகத்தை நம்பாதே!” என்று கூச்சலிட்டவாறு நயினா முகம்மது டைகரின் முன்னேவந்து பயங்கரத் தோற்றம் காட்டினான். “என்னப்பா கதை அளக்கிறாய்-சிந்தாமணி சேறல்ல; வந்திருக்கிறாயா? செந்தாமரை என்று நிரூபிப்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/60&oldid=1708086" இலிருந்து மீள்விக்கப்பட்டது