பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வெள்ளிக்கிழமை 'விஷயம் வெளிச்சமாகித்தானே மாப்பிள்ளை வீட்டார் மனமுடைந்துத் திரும்பியிருக்கிறார்கள் " என்று தங்களு டைய அரைகுறைச் சந்தேகங்களையும் போக்கிக்கொண் டார்கள் திடீர் முடிவுக்காரர்கள் சிலர்! எப்படியோ சிந்தாமணிக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டு அது ஊர் முழுவதும் பரவிவிட்டது. சிவநேசர் வீட்டை மிக அலட்சியத்தோடு பார்க்க முற்பட்டார்கள் அவரது சொந்தக்காரர்கள். ஒருவனுக்குக் கஷ்டம் வந்துவிட்டால் முதலில் சந்தோஷப்படுவதும் சங்கடப்படுவதுபோல் காட்டிக்கொண்டு மேலும் தொல்லைகளை உண்டாக்குவதும் சொந்தக்காரராகத்தானே இருப்பார்கள்! மட்டுமென்ன ; வேதபுரத்திலேயிருப்பவர்கள் விதி விலக்கா? "சிவநேசன் சரியானபடி சிக்கிக் கொண்டான். பெங்களூர் சம்பந்தமாமே பெங்களூர் சம்பந்தம் ! பெரிய இடத்து சம்பந்தம் ! எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது!" என்று தங்களுக்குத் தாங்களே பூரிப்படைந்தார்கள், அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைகளாயுள்ள உறவினர்கள் ! சிந்தாமணியின் தோழிகளோ சிந்தை கலங்கி நின்றனர். தங்கள் ஆருயிர்த் தோழிக்கு இப்படி ஒரு அவமானம் வந் துற்றதேயென்று ஏங்கித் தவித்தனர்: அவர்களாலும் இந்தப் புதிரைப் புரிந்துகொள்ள இயலவில்லை. பேசப் பேச அவர்களிலேயே பிளவு ஏற்பட்டது. ஊரார் ஒரு வேளை நமக்கும் தெரியாத உண்மையாக இருக் குமோ ?" என்ற சந்தேகம் துளிர்விடத் தொடங்கியது, தோழிகள் சிலருக்கு! எந்த மணமும் இல்லாத இடத்திலே "எலுமிச்சம்பழ வாடை வீசுகிறது என்று மந்திரவாதி நாலுமுறை நம்புவதுபோல் சொல்வானேயானால் நமக்குக் கூட அந்த வாடை வீசுவதுபோல் தோன்றலாம். பொய் யைப் பத்துமுறை வற்புறுத்திச் சொன்னால் மெய்யாகத் தோற்றமெடுக்கும் என்பார்கள். அப்படிச் சொல்லித் தானே “கடவுள் என்ற சொல்லை வாழ்க்கை அகராதி யிலே பெரிய எழுத்துக்களில் அச்சடித்து வைத்திருக்கிறார் கள்! உலக மக்களை ஏமாற்றும் பொய்மைகளே உண்மை ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/77&oldid=1708103" இலிருந்து மீள்விக்கப்பட்டது