பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வெள்ளிக்கிழமை தாள் மகளைப் பார்த்து வீவரமெதுவும் அறிய முடியாத படி போய்விட்டதே-அவள் எங்கு போயிருப்பாள் - ஒரு வேளை சேதி கேள்விப்பட்டு வேதனை தாங்காமல் எங்கா வது ஓடிப்போய்... அய்யோ ! அதை கற்பனை செய்யவே முடியவில்லை! 60 மணி ஒன்பது அடித்தது-இருள் சூழ்ந்த வேதபுரத் தில் கண் கட்டப்பட்ட நிலையிலே தத்தளித்துக்கொண்டி ருந்தாள் சிவகாமி. வாயிற்புறத்தில் யாரோ வரும் சத்தம் கேட்டது. 'சிந்தாமணி!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினாள் சிவகாமி ! அவள் அலறியதைக்கேட்ட சிவநேசர் அறைக்குள்ளிருந்தபடியே "சிந்தாமணியா? அந்தச் சீரழிந்தவளா?" என்று கூச்சலிட்டு உளர ஆரம் பித்தார். தெருவுக்கு ஓடிய சிவகாமி திகைத்து நின்றாள். எதிரே டைகர் நின்றுகொண்டிருந்தான். "என்ன வீடு ஒரே ரகளைப்படுகிறது! என்ன அத்தை சமாசாரம்! மாமா எங்கே ?" என்று கேட்டான் டைகச்1 மாமா! இதோ இருக்கிறேன் மானங்கெட்ட மாமன் இதோ இருக்கிறேன். கதவைத் திறவீர்! கதவைத் திற வீர் ! இல்லாவிட்டால் இந்த ஊரையே அழித்துவிடுவேன்! நான் தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்! மானேந்தி மழுவேந்தி ! தலையிலே கங்கையேந்தி!! பக்கத்திலே பார்வதி யேந்தி! நான் தான் பரமசிவன் ! அடே ராக்ஷசா! உடனே கதவைத் திறக்கிறாயா? என் காளை வாகனத்தைவிட்டு உன்னை முட்டச் சொல்லட்டுமா? அடி பார்வதி ! ஹே ; சிவகாமி! கதவைத் திற! இல்லாவிட்டால் தான் தேவாரப் பதிகம்பாடி திருமறைக் காட்டில் கதவு திறந்ததுபோல் திறந்திடுவேன் என்று கடல்மடை திறந்தாற்போல பேச ஆரம்பித்தார் சிவநேசர். பித்து அதிகமாகிறது என்பதை உணர்ந்த சிவகாமி, சிவகாமி, தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு அழத் தொடங்கினாள். என்ன அத்தை இது! கொஞ்சங்கூட புத்தி கிடையாது உங்களுக்கு! இப்போது என்ன வந்துவிட்டது? ஏன் ப்படித் தாண்டவமாடு கிறீர்கள் ?" என்றான் டைகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/79&oldid=1708105" இலிருந்து மீள்விக்கப்பட்டது