பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



எழுச்சி

பங்குனி மாதம்; காலை
பத்தரை மணிக்கு நானும்
இங்கித மாக நெஞ்சிற்
கின்பத்தை யீந்து செல்லும்
துங்கபத் திரையின் தூய
துறைதனி லிருந்தேன் குந்தி !
மங்கல கீதமாக
மாங்குயில் பாடல் மாந்த !

சிங்கத்தின் குரளை யென்று
செப்பிடத் தக்க செம்மல் !
மங்குலில் பாடல் மாந்த
மதியத்தை யொத்தந் நீரில்
முங்குவா னெழுவா னாகி
முயன்றனன்; மொழுமொழென்றே
அங்கையி லெதையோ பற்றி
அழுத்தமா யமிழ்த்து வோனாய் !

சங்கதி யென்ன ? தம்பீ!
சாற்றென வினவ வேநான்,
அங்கவன் மொழிந்தான்- "அண்ணா !
அகிலத்தின் மீதில் ஈடற்
றெங்குகண் டாலு மேழை
யிதயத்தி லுரிமை வேட்கை
பொங்குதல் கண்டு, பொல்லாப்
பொருளாளர் புழுங்கு கின்றார்.

இங்கத னியல்பு யாதென்
றின்றுநா னறிய வெண்ணி,
எங்களிற் கொல்லை வேலிக்
கேற்பவே படர்ந்து காய்த்துத்

103