பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



கனவு


வாசித்துக் கொண்டிருந்ததேன் ஒருநாள் காலை
வாருங்கள் போய்வரலாம்; என்றான் நண்பன்
யோசித்துப் பார்த்திடவும் தோன்றவில்லை
ஊகும் ; நான் வரவில்லை யென்றா லெங்கள்
நேசத்துக் கழகாகா தெனவே நானும்
நினைவுமறந்தவனுடனே நேர்ந்து சென்றேன்.
தேசத்தைக் கடந்துகடல் தீரம் தாண்டித்
தேவருல கம்தேடிச் சென்றோம் மேலும் !

எப்போதோ எனதருமை நண்பனோடும்
இருவரும்நாம் அயனிடம்போய் வரலா மென்ற
தப்போதென் நினைவுக்கு வந்த தால்சற்
றகமகிழ்ச்சி யடைந்தவனாய் அருமை நண்பா !
இப்போது தானறிந்தேன் நினது நெஞ்சை !
என்றென்றும் இந்நன்றி மறவேன். ஆனால்,
அப்போதில் அமர்ந்தவன்நம் முடனேபேச
அவகாச மெப்படியோ அறியே னென்றேன்

முன்கூட்டி நானறிந்தேன்; சும்மா யிங்கே
முணுமுணுக்க வேண்டாம் நீயென்றான் நண்பன்
நன்காட்டின் அமைதியென நலித்த தால்நான்
நடுங்காம லிருக்கநனி முயன்றேன்; நாடா
தென்கூட்டை விட்டுயிரும் ஏகல் என்ன
இருந்ததொரு கணநேரம் ; எட்டிப் பார்த்தேன்.
முன்வீட்டில் காவலின்றி வருக வென்னும்
முத்தெழுத்தைக் கண்டுமுகம் மலர்ந்து நின்றேன்

அழகியநன் மலரின்மேல் அமர்ந்தி ருக்கும்
ஆண்டவன்எம் மிருவரையும் அழைத்தன் பாகக்
குழந்தைகளின் குசலத்தை வினவிக் கூடக்
குந்துவதற்காசனமும் காட்டி விட்டுப்

105