பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

வெற்றி

அரையை யாய்த லொன்றே- அதனை
அறிய வைப்ப தொன்றே
இரண்டிருந்த தெனின் நாம் - உலகை
எளிதில் வென்று விடலாம் !

உரையை யோர்த லொன்றே-அதனை
உளத்தில் வைப்ப தொன்றே
இரண்டிருந்த தெனின்நாம் - உலகை
எளிதில் வென்று விடலாம் !

திரையைத் தீர்த்த லொன்றே-அதனைத்
தெரிய வைப்ப தொன்றே
இரண்டிருந்த தெனின்நாம்-உலகை
எளிதில் வென்று விடலாம் !

கரையைக் காண்ப தொன்றே-அதனைக்
கவின வைப்ப தொன்றே
இரண்டிருந்த தெனின்நாம்-உலகை
எளிதில் வென்று விடலாம் !

நிரையை நேர்தலொன்றே - அதனை
நிலையில் வைப்ப தொன்றே
இரண்டிருந்த தெனின்நாம் - உலகை
எளிதில் வென்று விடலாம் !

விரையை வேட்ட லொன்றே - அதனை
விளைத்து வைப்ப தொன்றே
இரண்டிருந்த தெனின்நாம் - உலகை
எளிதில் வென்று விடலாம் !

தரையைத் தாங்க லொன்றே-அதனைத்
தழைக்க வைப்ப தொன்றே
இரண்டிருந்த தெனின்நாம்-உலகை
எளிதில் வென்று விடலாம் !

113