பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

கண்திறந்து விடுபவரும் பகைவ ரென்பர்!
கணந்தாழாதனைவரொடும் கூறி நம்மைக்
கண்திறந்து விடுபவரும் பகைவராயின்
குணமாய்க்கொண் டப்பகைவர் தனைநாம் வாழ்த்திக்
குவலயத்தில் அவர்நலனை நினைப்போம் தோழா !



கண்டதைக் கற்றுக்
     கசடற்றோன் காசினியில்
பண்டிதன்காண் என்னும்
     பழமொழியொன் - றுண்டதிலே
சேர்ந்தவன்தான் நானுமெனச்
     செப்புகின்றேன், செந்தமிழை
ஓர்ந்தவர்தம் ஓர
     உளத்து.

117