பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


மல்லிகை

காலை முற்பகல் முழுவதும் பற்பல
காரி யங்களிலே - ஒன்றிக்
கருத்து டன்மன மீடு பட்ட
களைப்பு நீங்கிடவே
மாலை யில்மகிழ்ந் தேன் அமர்ந்தொரு
மல்லி கைக் கொடிபால் - மாறா
மலர்ம ணந்தனை நுகர்வ தற்கென
மனது நிறைவுடனே !

அந்தி யாகிய தேவி யின்எழில்
அரவணைப்பினிலே - கதிரோன்
அகம கிழ்ந்துதன் மெய்ம்ம றந்தவன்
ஆயி ருக்கையிலே,
சிந்தை யின்பசி தீர அத்தெவிட்
டாத காட்சியை நான் - கண்ணால்
சேர அள்ளி யருந்தி னேனொரு
சிலையை யொத்திருந்தே !

தீன மாயொரு குரலு மிங்கெனைத்
திரும்பிப் பாரெனவே - நெஞ்சும்
திடுக்கிடும்படி செவியில் வீழ்ந்தது
திரும்பி னேன் விரைவாய் !
மானி யாகிய மல்லி கைமலர்,
மனிதனே யென்னைக் - கொய்துன்
மடியி லாகிலும் மறைத்து வையென
மறைவு கோரியதால் !

இணையி லாத மணம்ப ரப்பிடும்
இனிய மல்லிகையே - உனக்கு
என்ன நேர்ந்ததின் றென்னி டம்விரைந்
தியம்பு நீ யெனவே,

135