பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

ஆய இந்தச் செயல்களில் யாதுமே
அன்றில் லாம லடங்கிக் கிடந்ததால்,
வேயின் கூனல் முதுகி லமர்ந்திசை
விரும்புந் தூக்கணங் குருவியு மாவலாய்
நேயமான குயிலை நெருங்கியே,
நேர்ந்த தென்னெனக் கேட்டது நேச ! இத்
தூய வுள்ளமில்லாக்கொடுங்காக்கையால்,
துன்ப முற்றனம்' என்றதப் பூங்குயில் !

* * *


நீக்கமறப்புக்கு
நிலவுமிருள் நீங்கிடவே
மாக்களொடு மக்கள்
மனம்மகிழ - காக்கைமனப்
போக்கைப் புடைப்பீர்
புலவர்காள், என்றுகுயில்
பாக்கள் படைக்கும்
பரிந்து

140