பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

அச்சிறு சீவ ராசி
அவலமாயழியக் கண்ட
பச்சிளம் பாலன் நெஞ்சு
பதறிற்று! பரிந்து வாய்விட்டு
'அச்சோ , ஆ! , ஆகா! 'வென்றே
அதட்டியே ஆர்ப்ப ரித்தான்
'கொச்சையாம் காக்கைக் கும்பல்
குவலயத் தொழிக? வென்றே!






மாலைக்குள் வந்து
மரங்களில் தங்கியெழில்
காலைக்குக் காத்திருக்கும்
காகங்கள் - சோலைக்குள்
'கா கா கா' வென்று
கரையுமொலி காதுகளை
நோகாமல் செய்திடும்
நோய் !

153